பாடகரை மணக்கும் தமிழ் பட நடிகை
பிரபல இந்தி பாடகர் மிகா சிங் மணமகளை தேர்வு செய்யும் சுயம்வர நிகழ்ச்சியில் நடிகை ஆகன்ஷா பூரிக்கு மாலை அணிவித்து மனைவியாக மிகா சிங் தேர்வு செய்தார்.
தமிழில் கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், விஷாலின் ஆக்ஷன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஆகன்ஷா பூரி. கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழில் ஒளிபரப்பான விநாயகர் பக்தி தொடரில் பார்வதி தேவியாக நடித்து இருந்தார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். இந்த நிலையில் பிரபல இந்தி பாடகர் மிகா சிங் மணமகளை தேர்வு செய்யும் சுயம்வர நிகழ்ச்சியொன்று தொலைக்காட்சியில் நடந்தது. இதில் நடிகை ஆகன்ஷா பூரி உள்பட 12 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இறுதி போட்டிக்கு 3 பேர் தேர்வானார்கள். அதில் ஆகன்ஷா பூரிக்கு மாலை அணிவித்து மனைவியாக மிகா சிங் தேர்வு செய்தார். ஆகன்ஷா பூரியின் பெற்றோரிடமும் அவர் ஆசி பெற்றார். மிகா சிங் எப்போதும் எனது வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கிறார் என்று ஆகன்ஷா பூரி தெரிவித்து உள்ளார். ஏற்கனவே இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. அப்போது காதல் இல்லை என்றும் நண்பர்களாகவே பழகுகிறோம் என்றும் விளக்கம் அளித்தனர். மிகா சிங் இந்தி, தெலுங்கு, கன்னட படங்களில் அதிக பாடல்களை பாடி இருக்கிறார்.