10 நாட்கள் நடிக்க ரூ.20 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்


10 நாட்கள் நடிக்க ரூ.20 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்
x

இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன் ஒரு படத்தில் வெறும் 10 நாட்கள் மட்டுமே நடிக்க ரூ.20 கோடி சம்பளம் வாங்கிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய நடிகர்கள் வாங்கும் சம்பள தொகையை கேள்விப்பட்டு ஏற்கனவே பலரும் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர். இந்தி நடிகர்கள் ரூ.150 கோடி ரூ.200 கோடி என்று வாங்குகிறார்கள். படங்களின் லாபத்திலும் பங்கு கேட்கிறார்கள். தமிழ், தெலுங்கு நடிகர்கள் சம்பளமும் உயர்ந்து உள்ளது. இத்தனைக்கும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள்தான் கால்ஷீட் கொடுக்கிறார்கள். 30 நாட்களில் நடித்து முடிக்கும் படங்களும் உள்ளன.

இந்த நிலையில் இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன் ஒரு படத்தில் வெறும் 10 நாட்கள் மட்டுமே நடிக்க ரூ.20 கோடி சம்பளம் வாங்கிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கார்த்திக் ஆர்யன் தனது முதல் படமான 'பியார் கா பஞ்சநாமா' படத்துக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் வாங்கி இருந்தார். கார்த்திக் ஆர்யன் அளித்துள்ள பேட்டியில், ''நான் நடித்த ஒரு படத்துக்கு ரூ.20 கோடி சம்பளம் வாங்கியது உண்மைதான்.

அந்த படத்தை 10 நாட்களில் முடித்து விட்டோம். தயாரிப்பாளருக்கு நிறைய லாபம் கிடைத்தது. எனவே அதில் நடிக்க ரூ.20 கோடி வாங்கியது தவறு இல்லை'' என்றார். கார்த்திக் ஆர்யன் தற்போது அனுராக் இயக்கத்தில் ஆஷிக்கி 3 மற்றும் ஷெகஜாதா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

1 More update

Next Story