நடிகரின் நீங்காத வருத்தம்


நடிகரின் நீங்காத வருத்தம்
x

'அங்காடித் தெரு' படத்தில் நடித்த பிறகு அஞ்சலி பிசியான நடிகையாக மாறினார். ஆனால் கதாநாயகனாக நடித்த மகேஷால் வளர முடியவில்லை. சமீபத்தில் தனது சினிமா வாழ்க்கை குறித்து பேசிய மகேஷ், "ஈட்டி, சுந்தரபாண்டியன், மாயாண்டி குடும்பத்தார் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது அதை தவற விட்டுவிட்டேன். 'அங்காடித் தெரு' படத்திற்கு பிறகு சினிமாவில் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும்? எப்படி கதைகளை தேர்வு செய்ய வேண்டும்? என்று எனக்கு சொல்லித் தர யாரும் இல்லை. அதனாலேயே என்னுடைய சினிமா வாழ்க்கை வீணாகி விட்டது" என்று வருந்தினாராம்.


Next Story