ரூ.22 கோடிக்கு வீடு வாங்கிய நடிகை


ரூ.22 கோடிக்கு வீடு வாங்கிய நடிகை
x

மும்பை கடற்கரை அருகில் உள்ள அலிபாக் என்ற இடத்தில் கணவருடன் இணைந்து ஆடம்பர பங்களாவை தீபிகா படுகோனே 18 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த பங்களா வீட்டை ரூ.22 கோடிக்கு வாங்கி இருக்கிறார்கள்.

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே இந்தி திரையுலகில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் இருவரும் கோடி கோடியாக சம்பாதித்து தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறார்கள். தற்போது மும்பை கடற்கரை அருகில் உள்ள அலிபாக் என்ற இடத்தில் கணவருடன் இணைந்து ஆடம்பர பங்களாவை தீபிகா படுகோனே விலைக்கு வாங்கி உள்ளார். 18 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த பங்களா வீட்டை ரூ.22 கோடிக்கு வாங்கி இருக்கிறார்கள். வீட்டின் கிரகப்பிரவேசம் தற்போது நடந்துள்ளது. இதில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். தங்கள் முகத்தை காட்டாமல் கிரகப்பிரவேசம் படங்களை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 16, 17, 18-வது மாடிகளை இணைத்து 11 ஆயிரத்து 266 சதுர அடியில் ரூ.119 கோடிக்கு வீடு வாங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story