கேரள பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை படைத்த லியோ திரைப்படம்...!


கேரள பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை படைத்த லியோ திரைப்படம்...!
x

'லியோ' திரைப்படம் உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்ததால் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூலித்தது. மேலும் இப்படம் தற்போது வரை உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் லியோ திரைப்படம் கேரள பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

லியோ திரைப்படம் கேரளாவில் வெளியான நாளிலிருந்து 55 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கேரள மாநிலத்தில் அதிகம் வசூலித்த முதல் தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.



Next Story