விமல், சூரி இணைந்து நடிக்கும் படம்


விமல், சூரி இணைந்து நடிக்கும் படம்
x

விமல், சூரி ஆகியோர் நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்து நடித்துள்ள புதிய படம் `படவா'.

இதில் நாயகியாக ஶ்ரீதா நடிக்கிறார். ராம் வில்லனாக வருகிறார். தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர். சரவண சக்தி, சாம் உள்பட 40-க்கும் மேற்பட்ட நடிகர்- நடிகைகள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை கே.வி.நந்தா டைரக்டு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரித்துள்ளார். விவசாயம் பற்றி பேசும் சமூக பொறுப்புள்ள படமாக தயாராகிறது. சூரிக்கு படத்தில் பெரிய கேரக்டர் அமைந்துள்ளது. படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன. ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் பற்றி டைரக்டர் பேரரசு பேசும்போது, ``ஜான் பீட்டர் படத்தின் தயாரிப்பாளர் மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் இருக்கிறார். பாடல்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு அருமையாக இருக்கிறது. விமல் வெற்றி அடைந்து கொண்டே இருக்க வேண்டும். `படவா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இந்த திரைப்படம் விவசாயத்தை பற்றியது. `கடைசி விவசாயி' தேசிய விருது பெற்றது. டிரைலரை பார்க்கும் போது அது போன்ற திரைப்படமாகத்தான் `படவா' இருக்கும் என்று தோன்றுகிறது'' என்றார்.


Next Story