கதாநாயகியான டி.வி. நடிகைகள்


கதாநாயகியான டி.வி. நடிகைகள்
x

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் கேப்ரில்லா. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் பங்கேற்று இருக்கிறார். இவர் 'என் 4' என்ற பெயரில் தயாராகும் படம் மூலம் கதாநாயகி ஆகி உள்ளார். இதே படத்தில் இன்னொரு கதாநாயகியாக தொலைக்காட்சி நடிகை வினுஷா நடிக்கிறார்.

கேப்ரில்லா ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் வந்த 'ஐரா' படத்தில் சிறுவயது நயன்தாராவாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு டி.வி. நடிகைகள் கதாநாயகியாக நடிப்பது 'என் 4' படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் குமார் டைரக்டு செய்கிறார். அபிஷேக், அப்சல், அக்ஷய், பிரயாகா, அனுபமா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கேப்ரில்லா கூறும்போது, "என் 4 சிறந்த கதை. நான் மீனவ பெண்ணாகவும் வினுஷா மாற்றுத்திறனாளியாகவும் நடித்துள்ளோம். ஒரு சம்பவத்தில் 3 ஜோடிகள் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியை தொடர்புப்படுத்தி நகரும் கதையாக தயாராகி உள்ளது. ஒரு சிறிய தவறு எப்படி சிக்கலை உருவாக்குகிறது என்பது கருவாக இருக்கும்'' என்றார். ராயபுரம், காசிமேடு பகுதிகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது.


Next Story