யோகி பாபு நடிக்கும் 'குய்கோ' படத்தின் பாடல் வெளியானது!


யோகி பாபு நடிக்கும் குய்கோ படத்தின் பாடல் வெளியானது!
x

யோகி பாபு தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.

சென்னை,

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.

இந்த நிலையில் தற்போது 'குய்கோ' எனும் படத்தில் யோகி பாபு நடித்துள்ளார். இந்த படத்தை விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை படத்தின் கதாசிரியர் அருள்செழியன் இயக்கியுள்ளார். இதில் விதார்த், இளவரசு, ஸ்ரீபிரியங்கா, முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அந்தோனிதாசன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் 'ஏ சிவப்பழகி' எனும் பாடல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.


Next Story