5 ஏக்கரில் பிரகாஷ்ராஜ் தொடங்கிய நாடக மையம்


5 ஏக்கரில் பிரகாஷ்ராஜ் தொடங்கிய நாடக மையம்
x

பிரபல நடிகராக இருக்கும் பிரகாஷ்ராஜ் நாடக கலை அழியாமல் இருக்கவும், புதிய நாடக கலைஞர்களை உருவாக்கவும் நிர்தி கந்தா என்ற நாடக மையத்தை தொடங்கி உள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் பிரகாஷ்ராஜ் நாடக கலை அழியாமல் இருக்கவும், புதிய நாடக கலைஞர்களை உருவாக்கவும் நிர்தி கந்தா என்ற நாடக மையத்தை தொடங்கி உள்ளார்.

இதுகுறித்து பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டியில், "எனக்கு ஆரம்பத்தில் நாடகம்தான் வாழ்க்கையை கொடுத்தது. சோறு போட்டது. வெள்ளித்திரையிலும் அறிமுகம் செய்து வைத்தது. அதற்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக நாடக கலைக்கு ஒரு மேடையை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இரைச்சல் இல்லாத இடமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கர்நாடகாவில் ஸ்ரீரங்கபட்டினத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லோக பாவணி நதிக்கரையில் சுற்றிலும் மனித நடமாட்டம் இல்லாமல் பச்சை பசேல் என்று இருக்கும் அமைதியான இடத்தை தேர்வு செய்து 5 ஏக்கரில் நாடக மையத்தை உருவாக்கி உள்ளேன்.

இங்கு தினமும் நடிகர்கள், இயக்குனர்கள், எழுத்தாளர்கள் வருகிறார்கள். நிறைய மாணவர்கள் நடிப்பு கற்றுக்கொள்கிறார்கள். இங்கு நடிகர்களை தேர்வு செய்யலாம். ஒரு புதிய முயற்சியாக இதை தொடங்கி இருக்கிறேன். இதன் மூலம் 2 ஆண்டுகளில் 20 புதிய நாடகங்கள் ரசிகர்கள் முன்னால் கொண்டு செல்லப்படும்'' என்றார்.


Next Story