'தமிழ் சினிமாவில் மட்டும் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் உள்ளன'- நடிகை ரேகா நாயர்


There are lakhs of sexual complaints in Tamil cinema
x

தமிழ் சினிமாவில் மட்டும் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் உள்ளதாக நடிகை ரேகா நாயர் குற்றம்சாட்டினார்.

சென்னை,

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானபின், மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். அதற்கு ஏற்ப குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

கேரளா மட்டுமல்லாமல் மற்ற திரையுலகிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சில நடிகைகள் அடுக்கடுக்கான புகார்களை அள்ளி வீசி வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவில் மட்டும் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் உள்ளதாக நடிகை ரேகா நாயர் குற்றம்சாட்டி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,

'அனைத்து மொழி சினிமாவிலும் பாலியல் அத்துமீறல் உள்ளன. தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகைகள் முதல் இன்றுதான் படப்பிடிப்பு தளம் எப்படி இருக்கும் என்று தெரிந்த பெண் வரை அனைவரும் இதை அனுபவித்து கொண்டுதான் இருக்கிறார்கள். நான் குரல் கொடுத்தால் எனக்கு சினிமாவில் வாய்ப்பு வழங்கப்படாது. அதனால்தான், சில நடிகைகளும் நமக்கு எதற்கு இந்த வேலை என்று இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் மட்டும் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் உள்ளன. மலையாளத்திலாவது, 10 முதல் 20 பேர்தான் சிக்கியிருக்கிறார்கள், ஹேமா கமிட்டி அறிக்கைபோல இங்கு வெளியானால் 500க்கும் மேற்பட்டோர் சிக்குவார்கள்,' என்றார்

1 More update

Next Story