திருமண பந்தம் மீது நம்பிக்கை உள்ளது - நடிகை தமன்னா


திருமண பந்தம் மீது நம்பிக்கை உள்ளது - நடிகை தமன்னா
x

நடிகை தமன்னா இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

ஐதராபாத்தில் தமன்னா அளித்த பேட்டியில் கூறும்போது, "இப்போது எனது சினிமா வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. கடந்த ஐந்து மாதங்களில் எனது நடிப்பில் திரைப்படம், வெப் தொடர் என்று ஆறு படங்கள் வெளிவந்தன.

ரசிகர்கள் என் மீது அதிக அன்பு காட்டுகிறார்கள். ரசிகர்களுக்காக என் சக்தியை மீறி உழைக்க தயாராக இருக்கிறேன். ஒரு நடிகையாக தற்போது உயர்வான இடத்தில் இருக்கிறேன். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.

திருமண அமைப்பின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. திருமணம் என்பது முக்கிய பொறுப்பு. அதற்கு நான் தயாரானதும் திருமணம் செய்து கொள்வேன். இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை.

எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. முன்பை விட தெளிவாக பேச கற்றுக்கொண்டேன். முன்பெல்லாம் இப்படி பேசினால் தவறாக நினைத்துக்கொள்வார்களோ என்ற பயம் இருந்தது. இப்போது அது இல்லை" என்றார்

1 More update

Next Story