தனியாக வரும்படி அழைத்தனர்... பிரபல நடிகையின் கசப்பான அனுபவம்


தனியாக வரும்படி அழைத்தனர்... பிரபல நடிகையின் கசப்பான அனுபவம்
x

1990-களில் பிரபல நடிகையாக இருந்த ஆமனி தனது ஆரம்ப காலத்தில் சினிமாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் 1990-களில் பிரபல நடிகையாக இருந்தவர் ஆமனி. தமிழில் தங்கமான தங்கச்சி, இதுதாண்டா சட்டம், முதல் சீதனம், ஹானஸ்ட் ராஜ், புதையல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் சினிமாவை விட்டு விலகி நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் சினிமாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை ஆமனி பகிர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், "நான், சினிமா துறையில் அடியெடுத்து வைத்த புதிதில் சிலர் மிகவும் ஆபாசமாக பேசி அதையே நகைச்சுவை என்பது போல காட்டிக்கொண்டார்கள். சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கொடுப்பதற்கு சிலர் தங்களுக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்று கேட்டார்கள்.

நாங்கள் சொல்லும் இடத்திற்கு நீ மட்டும் தனியாக வரவேண்டும் என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள். தமிழ் சினிமா மூலம் தான் எனது சினிமா வாழ்க்கை ஆரம்பமானது. வாய்ப்புகளுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கஷ்டப்பட்டேன்.

சினிமாவில் வர வேண்டும் என்றால் இப்படி எல்லாம் இருக்க வேண்டுமா என்று நான் அதிர்ச்சி அடைந்தபோது எந்த தவறும் செய்யாமலே சினிமாவில் நடிக்கலாம் என்று என் அம்மா தைரியம் கொடுத்தார்'' என்றார்.


Next Story