இந்த பொங்கல் பண்டிகை எனக்கு விசேஷமானது - நடிகை காஜல் அகர்வால்


இந்த பொங்கல் பண்டிகை எனக்கு விசேஷமானது - நடிகை காஜல் அகர்வால்
x

இந்த பொங்கல் பண்டிகை எனக்கு விசேஷமானது என்று நடிகை காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசனுடன் 'இந்தியன்-2' படத்தில் நடித்து வருகிறார். திருமணமாகி ஒரு குழந்தைக்கும் தாயாகி இருக்கிறார். பொங்கல் பண்டிகை மகிழ்ச்சி அனுபவங்களை பகிர்ந்து காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில், ''பொங்கல் பண்டிகை அன்று செய்யும் விதவிதமான உணவு வகைகளை ருசித்துப்பார்ப்பதில் எனக்கு மிகவும் விருப்பம்.

பொங்கல் விழாவை எங்கள் பஞ்சாபிகள் லோஹ்ரி என்று கொண்டாடுகிறார்கள். அம்மா வீட்டில் சிறப்பு பூஜை செய்வார். வெல்லம், எள், கடலைப்பருப்பு போன்றவற்றை வைத்து பல வகையான உணவு பலகாரங்களை அம்மா தயார் செய்வார். அன்று அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டு சாப்பிடுவோம். நடனமும் ஆடுவோம்.

திருமணம் ஆன பிறகு பிறந்த வீடு, மாமியார் வீடு என இரண்டு குடும்பங்களிலும் மாறி மாறி சென்று பண்டிகையை கொண்டாடினேன். அது புதிய அனுபவமாக இருந்தது.

என் மகன் நீலுடன் நான் கொண்டாடும் முதல் பொங்கல் இது. அதனால்தான் எனக்கு இந்த பொங்கல் மேலும் சிறப்பான விசேஷமான பொங்கல். இந்திய மக்கள் அனைவருக்கும், எனது ரசிகர்களுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் சந்தோஷப்படுகிறேன்'' என்றார்.

1 More update

Next Story