யூ டியூப்'-ல் 15 மில்லியன் பார்வைகளை கடந்தது 'துணிவு' டிரெய்லர்


யூ டியூப்-ல் 15 மில்லியன் பார்வைகளை கடந்தது துணிவு டிரெய்லர்
x

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

சென்னை,

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா' ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. தற்போது இந்த டிரைலர் யூ டியூப்பில் 15 மில்லியன் பார்வைகளை கடந்து அதிகம் வைரலாகி வருகிறது.


Next Story