ஹன்சிகா படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!


ஹன்சிகா படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!
x

நடிகை ஹன்சிகா நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகை ஹன்சிகா சிறிய இடைவெளிக்குப் பிறகு 'மஹா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றது.

இதைத் தொடர்ந்து நடிகை ஹன்சிகா இயக்குனர் சபரி - குரு சரவணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். பிலிம் வொர்க்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். எம். தியாகராஜன் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த நிலையில், இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு 'கார்டியன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Next Story