கோவாவில் நடிகை திரிப்தி டிம்ரி... ஆனால் தனியாக இல்லை


கோவாவில் நடிகை திரிப்தி டிம்ரி... ஆனால் தனியாக இல்லை
x

image courtecy:instagram@tripti_dimri

விடுமுறையை கொண்டாட திரிப்தி டிம்ரி கோவா சென்றிருக்கிறார்.

சென்னை,

பிரபல பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி. இவர் 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளிவந்த 'அனிமல்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ.550 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இவர் தற்போது, பூல் புலையா 3-வது பாகத்தில் நடித்து வருகிறார். தற்போது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனால் விடுமுறையை கொண்டாட திரிப்தி டிம்ரி கோவா சென்றிருக்கிறார். இது கூறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதேசமயத்தில், திரிப்தி டிம்ரி பகிர்ந்த புகைப்படம்போன்று அவரின் காதலன் என்று வதந்தி பரப்பப்படும் நபரான சாம் மெர்சன்டும் பகிர்ந்திருக்கிறார். இதனால் திரிப்தி டிம்ரி அங்கு தனியாக செல்லவில்லை என்பது தெரிகிறது. இதனை கண்ட ரசிகர்களும் இருவரும் ஒன்றாக கோவா சென்றுள்ளதாக கூறி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திரிப்தி டிம்ரியும் சாம் மெர்சன்டும் ஷாப்பிங் செய்யும் வீடியோ இணையத்தில் பரவி வைரலானது. மேலும், இருவரும் இணைந்து ஹோலி பண்டிகை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.Next Story