உன்னி முகுந்தன் நடித்துள்ள 'மார்கோ' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்


உன்னி முகுந்தன் நடித்துள்ள மார்கோ படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்
x

'மார்கோ' படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை உன்னி முகுந்தன் புதிய போஸ்டரை வெளியிட்டு பகிர்ந்துள்ளார்.

நடிகர் உன்னி முகுந்தன் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் பல வெற்றி படங்களில் நடித்து கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். அந்த வகையில் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான 'சீடன்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சூரி நடிப்பில் வெளியான 'கருடன்' திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் உன்னி முகுந்தன்.

இவர் தற்போது 'மார்கோ' என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஹனீப் அடேனி இயக்கியுள்ளார். படத்திற்கு சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய 'கே ஜி எப், சலார்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இதற்கு இசையமைத்துள்ளார். ஆக்சன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்தில் யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ் , அபிமன்யூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

இன்று நடிகர் உன்னி முகுந்தன் 'மார்கோ' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். இத்திரைப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இது குறித்த பதிவை நடிகர் உன்னி முகுந்தன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story