ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையில் புகைப்படத்தை பதிவிட்ட ஊர்வசியின் தாயார்


தினத்தந்தி 9 Jan 2023 11:49 PM IST (Updated: 10 Jan 2023 1:37 AM IST)
t-max-icont-min-icon

நடிகை ஊர்வசி ரவுத்தலா கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை காதலிப்பதாக கூறப்படுகிறது.

மும்பை,

தமிழில் 'தி லெஜண்ட்' படத்தில் நடித்தவர் ஊர்வசி ரவுத்தலா. இவர் இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். அதேவேளை, நடிகை ஊர்வசி ரவுத்தலா இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை காதலிப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சமூகவலைதளங்களில் அவ்வப்போதும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதேவேளை, ஊர்வசி ரவுத்தலா சில நேரங்களில் ரிஷப் பண்ட்டை விமர்சிக்கும் வகையிலும், சில நேரங்களில் ஆதரவு தெரிவிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சமூகவலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த கார் விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயமடைந்தார். இதையடுத்து உத்தரகாண்டில் உள்ள டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் டேராடூனில் இருந்து மும்பைக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டார். ரிஷப் பண்ட்டிற்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யபட்டுள்ளது.

முன்னதாக, மும்பையில் ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் புகைப்படத்தை ஊர்வசி ரவுத்தலா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், மும்பையில் ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை புகைப்படத்தை ஊர்வசி ரவுத்தலாவின் தாயார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும்,

'அனைத்தும் சரியாகிவிடும்... கவலைப்படாதே ஊர்வசி ரவுத்தலா' என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஊர்வசி ரவுத்தலா கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை காதலிப்பதாக கூறப்படும் நிலையில் ஊர்வசியின் தாயார் மீனா, விபத்தில் காயமடைந்து ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையில் புகைப்படத்தை பகிர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




1 More update

Next Story