சினிமாவில் நடிக்க வரும் ஊர்வசி மகள்?


சினிமாவில் நடிக்க வரும் ஊர்வசி மகள்?
x

ஊர்வசி தனது மகள் குஞ்சட்டாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஊர்வசி வெளியிட்டு உள்ளார். இதன் மூலம் குஞ்சட்டா சினிமாவில் நடிக்க வருகிறாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழில் பாக்யராஜ் இயக்கி நடித்த 'முந்தானை முடிச்சு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி 1980 மற்றும் 90-களில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடிக்கட்டி பறந்தவர் ஊர்வசி. தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார். ஊர்வசி பிரபல கதாநாயகியாக வலம் வந்தபோது மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

இவர்களுக்கு குஞ்சட்டா என்ற மகள் இருக்கிறார். இவர் தாய், தந்தை இருவருடனும் மாறிமாறி வசித்து வருகிறார். விவாகரத்துக்கு பிறகு ஊர்வசி இன்னொரு திருமணம் செய்து கொண்டார். தற்போது ஊர்வசிக்கு 50 வயதாகும் நிலையில் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மகள் குஞ்சட்டாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஊர்வசி வெளியிட்டு உள்ளார். இதன் மூலம் குஞ்சட்டா சினிமாவில் நடிக்க வருகிறாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அடுத்த கதாநாயகி ரெடி என்று ரசிகர்களும் வலைதளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

குஞ்சட்டாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்த சில இயக்குனர்களும் விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. அவர் நடிப்பாரா? என்பது விரைவில் தெரியவரும்.


Next Story