68-வது படத்தில் இரட்டை வேடங்களில் விஜய்?


68-வது படத்தில் இரட்டை வேடங்களில் விஜய்?
x
தினத்தந்தி 19 Aug 2023 8:39 AM IST (Updated: 19 Aug 2023 1:22 PM IST)
t-max-icont-min-icon

68-வது படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் விஜய் நடித்துள்ளார். திரிஷா நாயகியாக வருகிறார். சஞ்சய்தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது.

இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்க உள்ள 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். சென்னை 28, சரோஜா, மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்துள்ள வெங்கட் பிரபு முதல் தடவையாக விஜய் படத்தை இயக்குவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதில் விஜய் ஜோடியாக ஜோதிகாவை நடிக்க வைக்க பேசி வருகிறார்கள். இவர்கள் ஏற்கனவே குஷி, திருமலை ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.

68-வது படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசியாக பிகில் படத்தில் தந்தை, மகன் என்று இரண்டு வேடங்களில் விஜய் நடித்து இருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது.

1 More update

Next Story