கேரளாவில் நடிகர் விஜய் - ரசிகர்களின் உற்சாகம்; வீடியோ வைரல்


கேரளாவில் நடிகர் விஜய் - ரசிகர்களின் உற்சாகம்;  வீடியோ வைரல்
x
தினத்தந்தி 18 March 2024 8:02 PM IST (Updated: 21 March 2024 5:25 PM IST)
t-max-icont-min-icon

வெங்கட் பிரபு இயக்கும் 'தி கோட்' படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருவனந்தபுரம்,

'தி கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக 14 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளா சென்றடைந்தார் நடிகர் விஜய். ரசிகர்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

கடைசியாக விஜய் கடந்த 2011-ம் ஆண்டு இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளியான 'காவலன்' படத்தின் படப்பிடிப்புக்காக 2010-ம் ஆண்டு நடிகர் விஜய் கேரளா சென்றார். அதன் பிறகு அவர் எந்தப்படத்தின் படபிடிப்புக்காகவும் கேரளா செல்லவில்லை. தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் கேரளாவின் திருவனந்தபுரத்தில் படமாக்கப்பட உள்ளது. இதனால், 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் கேரளா சென்றடைந்தார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும் அவர் பயணிக்கும் காரை ரசிகர்கள் பின்தொடர்ந்து செல்லும் காட்சிகளும் வைரலாகி வருகின்றன. கிட்டத்தட்ட 4 நாட்களுக்கும் மேலாக கேரளாவில் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story