"விஜய்சேதுபதி பயங்கரமான நடிகர்" - ஷாருக்கான்


விஜய்சேதுபதி பயங்கரமான நடிகர் - ஷாருக்கான்
x
தினத்தந்தி 13 July 2023 10:17 AM GMT (Updated: 13 July 2023 10:23 AM GMT)

ஜவான் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அட்லி, ரெடியா எனவும் ரசிகர்களை நோக்கி வினவியுள்ளார்.

மும்பை

ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் ஜவான் படத்தை அட்லீ இயக்கியுள்ளார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் முன்னோட்டம் ஜூலை 10-ஆம் தேதி வெளியானது. இதனை சுமார் 11.2 கோடி பேர் பார்த்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜவான் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அட்லி, ரெடியா எனவும் ரசிகர்களை நோக்கி வினவியுள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகியுள்ளது.

டுவிட்டரில் #AskSRK என்ற தலைப்பில் ஷாருக்கான் தன் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதுண்டு. அந்த வகையில் இன்று ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ஷாருக்கான் பதிலளித்தார். அப்போது அவரது ரசிகர் ஒருவர் "அட்லீ உங்கள் மிகப்பெரிய ரசிகர். அவருடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது?" என்று #AskSRK என டேக் செய்திருந்தார்.

அதற்கு ஷாருக்கான் "அட்லீ மிகவும் கூலான மனிதர். அவரது கடின உழைப்பால் என்னை படத்தில் அழகாக காட்டியுள்ளார். அவருக்கும், பிரியாவுக்கும், மீருக்கும் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்." என பதிலளித்திருந்தார்.

ரசிகர் ஒருவர் "விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் உங்கள் அனுபவம் என்ன?" என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஷாருக்கான் "நயன்தாரா மிகவும் இனிமையானவர். அவரிடம் அளவுக்கு அதிகமான அன்பும் மரியாதையும் உள்ளது. விஜய் சேதுபதி ஒரு பயங்கரமான நடிகர். உண்மையில் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது" என பதிலளித்தார்.




Next Story