வைரலாகும் புகைப்படம்: குத்துச்சண்டை போட்ட நடிகை ரோஜா


வைரலாகும் புகைப்படம்: குத்துச்சண்டை போட்ட நடிகை ரோஜா
x

விசாகப்பட்டினத்தில் நடந்த குத்துச்சண்டை போட்டியை தொடங்கி வைக்க சென்ற ரோஜா திடீரென கையில் கிளவுஸை மாட்டிக்கொண்டு சண்டை போட மைதானத்தில் இறங்கினார். இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகின்றன.

தமிழ் திரை உலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரோஜா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து இருக்கிறார். டைரக்டர் ஆர்.கே.செல்வமணியை 2002-ல் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதை குறைத்து அரசியலில் ஈடுபட்டார். தற்போது ஆந்திராவில் ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மந்திரிசபையில் சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அரசு விழாக்களில் பங்கேற்க செல்லும்போது மக்களுடன் சேர்ந்து கலை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவது, கபடி விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் நடந்த குத்துச்சண்டை போட்டியை தொடங்கி வைக்க சென்ற ரோஜா திடீரென கையில் கிளவுஸை மாட்டிக்கொண்டு சண்டை போட மைதானத்தில் இறங்கினார். வீரர்களுடன் குத்துச்சண்டை போட்டார். பார்வையாளர்கள் ரோஜாவை உற்சாகப்படுத்தினர். இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகின்றன.


Next Story