வதந்திக்கு விஷ்ணு விஷால் விளக்கம்


வதந்திக்கு விஷ்ணு விஷால் விளக்கம்
x

விஷ்ணு விஷால் நடித்து அடுத்தடுத்து திரைக்கு வந்த எப்.ஐ.ஆர், கட்டா குஸ்தி படங்கள் வெற்றி பெற்றன. தற்போது ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினியும் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். கிரிக்கெட் விளையாட்டு கதையம்சத்தில் உருவாகிறது.

இந்த நிலையில் விஷ்ணு விஷால் அடுத்து தனுசின் 50-வது படத்தில் நடிக்க இருப்பதாக இணைய தளங்களில் தகவல் வெளியானது. பின்னர் சில காரணங்களால் தனுஷ் படத்தில் நடிக்க மறுத்து விஷ்ணு விஷால் விலகி விட்டதாக இன்னொரு தகவலும் பரவியது. இதற்கு விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள பதிவில், "நான் அந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று வரும் வதந்திகளில் உண்மை இல்லை. ஆனாலும் நான் அந்தப் படத்தில் இருக்கவே விரும்புகிறேன். ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் நடிக்க வேண்டி இருப்பதால் அந்த படத்தில் நான் நடிக்கவில்லை. படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story