விஷ்ணு விஷாலின் 'எப்.ஐ.ஆர்' 2-ம் பாகம்


விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர் 2-ம் பாகம்
x

விஷ்ணு விஷால் தனது நடிப்பில் வெளியான 'எப்.ஐ.ஆர்' படத்தின் 2-ம் பாகமும் விரைவில் தயாராகும் என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்து உள்ளார்.

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் 2-ம் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. ரஜினியின் எந்திரன் 2-ம் பாகம் '2.0' என்ற பெயரில் வந்தது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம், சுந்தர்.சியின் அரண்மனை படங்கள் 3 பாகங்கள் வெளியானது.

பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வெளியாக இருக்கிறது. இந்தியன் படத்தின் 2-ம் பாகம் படப்பிடிப்பு நடக்கிறது. டெடி, சர்தார், கைதி, ஜிகர் தண்டா உள்ளிட்ட பல படங்களின் 2-ம் பாகங்கள் வெளிவர இருக்கின்றன.

இந்த நிலையில் விஷ்ணு விஷால் தனது நடிப்பில் வெளியான 'எப்.ஐ.ஆர்' படத்தின் 2-ம் பாகமும் விரைவில் தயாராகும் என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்து உள்ளார். எப்.ஐ.ஆர் மனு ஆனந்த் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதில் கவுதம் மேனன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா, ரெய்சா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். ஏற்கனவே விஷ்ணு விஷால் தனது ராட்சசன் படத்தின் 2-ம் பாகமும் உருவாகும் என்று அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story