'சினிமாவில் தான் தலைவர்களை தேடுகிறோம்' - நடிகை கஸ்தூரி பரபரப்பு பேச்சு


சினிமாவில் தான் தலைவர்களை தேடுகிறோம் - நடிகை கஸ்தூரி பரபரப்பு பேச்சு
x

சினிமா தாண்டி அரசியல் ரீதியாகவும் நடிகை கஸ்தூரியின் கருத்துகள் பரபரப்பு ஏற்படுத்துவது வழக்கம். அந்தவகையில் சமீபத்தில் கஸ்தூரி தெரிவித்த சில கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நடிகை கஸ்தூரி கூறுகையில், "தங்களது அபிமான நட்சத்திரம் எது செய்தாலும் சரி என்று நினைப்பது ரசிகர்களின் வழக்கம் தான். சினிமாவை, சினிமாவாக மட்டும் பார்த்தால் பிரச்சினையே வராது. மேற்கத்திய நாடுகளில் நிர்வாண படம் எடுத்தாலும் அதை கலை படம் என்று பாராட்டுவார்கள். அதுபோல இங்கு முடியாது. சினிமாவில் தான் அடுத்த தலைமுறைக்கான தலைவர்களையே தேடுவோம். அந்தவகையில் உச்ச நடிகர்கள் கூறும் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகவே மாறி போகிறது. 'லியோ' படத்தில் விஜய் பேசும் ஆபாச வார்த்தை சர்ச்சையானது. சினிமாவில் மிகப்பெரிய செல்வாக்கு பெற்ற நடிகர் விஜய், அரசியல் ரீதியான செயல்பாடுகளையும் வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார். கதைக்காக இந்த வசனம் பேசியதாக ஏற்க முடியாது. ஏனெனில் அவரை தலைவராகத்தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள். விஜய்யின் மிகப்பெரிய அந்தஸ்தை உணர்ந்து தான், இப்போது அந்த வார்த்தை நீக்கப்பட்டிருப்பதாக உணருகிறேன். எல்லாருமே பார்க்கவேண்டும் என்று விரும்பும் படங்களை, எல்லாருமே விரும்பும்படியாக எடுத்து வெளியிடுவதே நல்லது'', என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.


Next Story
  • chat