62-வது படத்தில் அஜித் ஜோடி யார்?


62-வது படத்தில் அஜித் ஜோடி யார்?
x

அஜித்குமாரின் 62-வது படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் மாற்றப்பட்டு டைரக்டர் மகிழ் திருமேனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. படத்துக்கு விடா முயற்சி என்று பெயர் வைத்துள்ளனர். படப்பிடிப்பை இந்த மாதம் இறுதியில் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

இந்த படம் முழுக்க அதிரடி திரில்லர் கதையம்சத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பைக் சுற்றுப்பயணத்தில் இருந்த அஜித்குமார் அதை முடித்துவிட்டு படப்பிடிப்பில் பங்கேற்க தயாராகி வருகிறார்.

இன்னொரு புறம் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ள இதர நடிகர் நடிகை தேர்வு ஓசையில்லாமல் நடந்து வருகிறது. இந்த படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார்? என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. அஜித்துக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஐஸ்வர்யா ராய், திரிஷா, கங்கனா ரணாவத், கத்ரினா கைப், கரீனா கபூர் ஆகிய 5 நடிகைகள் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர்களில் ஒருவரை தேர்வு செய்ய ஆலோசனை நடக்கிறது. ஐஸ்வர்யா ராய் ஏற்கனவே கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்திலும் திரிஷா ஜி, கிரீடம், மங்காத்தா படங்களிலும் அஜித்துடன் நடித்துள்ளனர்.


Next Story