சரண்யா பொன்வண்ணனின் ஆசை நிறைவேறுமா?


சரண்யா பொன்வண்ணனின் ஆசை நிறைவேறுமா?
x

விஜய்க்கு அம்மாவாக நடிக்க எனக்கு ஆசை இருக்கிறது. அந்த எண்ணம் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது” என சரண்யா பொன்வண்ணன் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவின் `பிஸி'யான அம்மா யார்? என்றால், சட்டென நினைவுக்கு வருவது சரண்யா பொன்வண்ணன் தான். கமல்ஹாசனின் 'நாயகன்' படம் மூலம் அறிமுகமான இவர், 80, 90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவின் அழகான கதாநாயகியாக பிரகாசித்தார்.

தற்போது வளர்ந்து வரும் கதாநாயகன் முதல் முன்னணி கதாநாயகர்கள் வரை, அனைவருக்கும் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது சாதுவான தோற்றமும், கதாபாத்திரத்தில் அவர் காட்டும் கலகலப்பும் வெகுவாக ரசிக்க செய்கிறது.

அஜித், சூர்யா, விக்ரம், கார்த்தி, சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், மாதவன், ஜீவா, பரத், சேரன், சசிகுமார், விமல் போன்ற பல கதாநாயகர்களுக்கு அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடித்திருக்கிறார். ஆனால் விஜய்க்கு மட்டும் இதுவரை அவர் அம்மாவாக நடிக்கவில்லை.

இதுகுறித்து சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற சரண்யா பொன்வண்ணன் கூறும்போது, "தமிழ் சினிமாவில் பல கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். விஜய்யுடன் நடிக்க அந்த வாய்ப்பு அமையவில்லை. விஜய்க்கு அம்மாவாக நடிக்க எனக்கு ஆசை இருக்கிறது. அந்த எண்ணம் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது" என்றார்.

சரண்யா பொன்வண்ணனின் ஆசை நிறைவேறுமா?

1 More update

Next Story