குஷ்புவுக்கு கோவில் கட்டியது போல் நயன்தாராவை ‘கடவுள்’ ஆக்கிய ரசிகர்கள்!


குஷ்புவுக்கு கோவில் கட்டியது போல் நயன்தாராவை ‘கடவுள்’ ஆக்கிய ரசிகர்கள்!
x
தினத்தந்தி 19 Jun 2020 7:39 AM IST (Updated: 19 Jun 2020 7:39 AM IST)
t-max-icont-min-icon

குஷ்புவுக்கு கோவில் கட்டியது போல, நடிகை நயன்தாராவை அவரது ரசிகர்கள் சிலர் கடவுளாக வணங்கி வருகிறார்கள்.


தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில், நம்பர்-1 நாயகியாக இருந்தவர், குஷ்பு. அந்த சமயத்தில் எல்லா பிரபல கதாநாயகர்களும் தங்கள் படங்களில், குஷ்புவை ஜோடியாக்கி கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள். ரசிகர்கள், ‘கனவுக்கன்னி’யாக குஷ்புவை கொண்டாடினார்கள். இதன் உச்சகட்டமாக சில ரசிகர்கள், குஷ்புவுக்கு கோவில் கட்டினார்கள்.

குஷ்புவை கொண்டாடிய அதே ரசிகர்கள் இப்போது அந்த இடத்தில், நயன்தாராவை வைத்து அழகு பார்க்கிறார்கள்.

நயன்தாரா தற்போது, ‘மூக்குத்தி அம்மன்’ என்ற பக்தி படத்தில் நடித்து வருகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தில், நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கிறார்.

அவர், ‘அம்மன்’ வேடத்தில் இருக்கும் படம் ஒன்றை (கடவுளாக நினைத்து) வீட்டின் பூஜை அறையில் வைத்து, சில ரசிகர்கள் வணங்கி வருகிறார்கள்.

“நயன்தாராவுக்கு ரசிகர்கள் இதே வரவேற்பை தொடர்ந்தால், அவர் எதிர்காலத்தில் அடுத்த கட்டத்துக்கு (அரசியலுக்கு) நகர்வது நிச்சயம்” என்கிறார், ஒரு பிரபல பட அதிபர்!

Next Story