ரஜினிகாந்த்-கமல்ஹாசனில் தொடங்கி அஜித்குமார்-தனுஷ் வரை...


ரஜினிகாந்த்-கமல்ஹாசனில் தொடங்கி அஜித்குமார்-தனுஷ் வரை...
x
தினத்தந்தி 26 Dec 2020 11:00 PM GMT (Updated: 25 Dec 2020 1:35 PM GMT)

சிறந்த கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து தயாரிக்கும் பட நிறுவனங்களில், சத்யஜோதி பிலிம்சும் ஒன்று.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், தனுஷ் போன்ற பிரபல கதாநாயகர்களை வைத்து படம் தயாரித்த நிறுவனம், இது.

இந்தப் பட நிறுவனம் அடுத்ததாக ஹிப் ஹாப் ஆதியை வைத்து, ‘அன்பறிவு’ என்ற படத்தை தயாரிக்கிறது. புதுமுக டைரக்டர் அஷ்வின்ராம் இயக்குகிறார். படத்தின் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் கூறியதாவது:-

“சத்யஜோதி பிலிம்ஸ் எப்போதுமே குடும்பங்கள் கொண்டாடும் படங்களைத் தருவதை குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகிறது. ஆதி நடிக்கும் ‘அன்பறிவு’ படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். ‘அன்பறிவு’ படம், `ஹிப் ஹாப்’ ஆதியை அனைத்து குடும்பங்களுக்கும் கொண்டு போய் சேர்க்கும். நெப் போலியன், விதார்த், சாய்குமார், ஊர்வசி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள்”.

Next Story