சினிமா துளிகள்

புதிய படத்தில் மகன் துருவுடன் மோதும் விக்ரம் + "||" + In the new film The son collides with the Dhruv Vikram

புதிய படத்தில் மகன் துருவுடன் மோதும் விக்ரம்

புதிய படத்தில் மகன் துருவுடன் மோதும் விக்ரம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் விக்ரம், துருவ் இருவருமே இணைந்து நடிக்கின்றனர்.
விக்ரம் தனது மகன் துருவை தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவில் கதாநாயகனாக அறிமுகம் செய்தார். இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் விக்ரம், துருவ் இருவருமே இணைந்து நடிக்கின்றனர். தந்தை, மகன் இருவரின் கதாபாத்திரங்களையும் படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். விக்ரமுக்கு இது 60-வது படம். சிம்ரன், வாணி போஜன் உள்ளிட்ட மேலும் பலர் படத்தில் நடிக்கின்றனர். விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் துருவுக்கு விக்ரம் வில்லனாக நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. இருவரும் ஆக்ரோஷமாக மோதும் சண்டை காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தந்தை, மகன் இணைந்து நடிப்பதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அடுத்து பரியேறும் பெருமாள் மற்றும் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் துருவ் நடிப்பார் என்று தெரிகிறது. இந்த படத்தில் அவர் கபடி வீரராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.