பிரபல இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய்


பிரபல இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய்
x
தினத்தந்தி 12 Oct 2021 11:40 PM IST (Updated: 12 Oct 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் 67-வது படத்தை பிரபல இயக்குனர் இயக்க இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இப்படத்தை மாநகரம், கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். தற்போது விஜய், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து விஜய்யின் 66-வது படத்தை வம்சி பைடி பல்லி இயக்க உள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சி பைடி பல்லி, விஜய்யுடன் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது.

இந்நிலையில் விஜய்யின் 67 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதை அறிந்த விஜய் ரசிகர்கள், சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி வருகிறார்கள்.
1 More update

Next Story