குணமாதானே பார்த்துருக்க... கோபப்பட்டு பார்த்ததில்லயே... மாஸ் காட்டும் அண்ணாத்த டீசர்


குணமாதானே பார்த்துருக்க... கோபப்பட்டு பார்த்ததில்லயே... மாஸ் காட்டும் அண்ணாத்த டீசர்
x
தினத்தந்தி 15 Oct 2021 5:06 PM (Updated: 15 Oct 2021 5:06 PM)
t-max-icont-min-icon

ஆயுத பூஜையை முன்னிட்டு ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கி இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது. இதனால் படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் 2 பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு அண்ணாத்த டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதில் கிராமத்தான குணமாதானே பார்த்துருக்க... கோபப்பட்டு பார்த்ததில்லயே... என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இந்த டீசர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1 More update

Next Story