‘தீபாவளி பண்டிகை எனக்கு ஸ்பெஷல்' -தீபிகா படுகோனே


‘தீபாவளி பண்டிகை எனக்கு ஸ்பெஷல்  -தீபிகா படுகோனே
x
தினத்தந்தி 3 Nov 2021 5:03 PM GMT (Updated: 3 Nov 2021 5:03 PM GMT)

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தீபாவளி பண்டிகை நினைவுகளை தீபிகா படுகோனே பகிர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “தீபாவளி என்றாலே எங்கள் வீட்டில் கோலாகலம் தான். ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே தீபாவளியை எப்படி கொண்டாடுவது என நானும், என் சகோதரியும் திட்டமிடுவோம். இது எனக்கு ஸ்பெஷலான பண்டிகை. சிறுவர்களுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிடித்தமான பண்டிகை. இந்த தீபாவளியையும் மிகச்சிறப்பாக கொண்டாட நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம். தீபாவளி என்றாலே எனது சிறுவயது நாட்கள் நினைவுக்கு வரும். வீடு முழுவதும் விளக்குகளை ஏற்றி ஒளிமயமாக்குவதற்கு நானும், என் சகோதரியும் போட்டி போட்டுக்கொண்டு செய்வோம். மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். முன்பெல்லாம் பட்டாசுகள் இவ்வளவு மாசுபடுத்தியதில்லை. வீடுகள் தள்ளி தள்ளி இருந்தன. பட்டாசுகளை வெடித்தால் யாருக்கும் எந்த ஆரோக்கிய கேடும் நடக்கவில்லை. ஆனால் இப்போது மாசு உள்ளது. எல்லோரும் வீட்டில் விளக்குகளை ஏற்றி தீபாவளி பண்டிகையை கொண்டாடுங்கள்” என்றார்.

Next Story