சினிமா துளிகள்

மணிரத்னத்தின் பேவரைட் இயக்குனருடன் கூட்டணி அமைத்த மம்முட்டி + "||" + Mammootty formed an alliance with Mani Ratnam's favorite director

மணிரத்னத்தின் பேவரைட் இயக்குனருடன் கூட்டணி அமைத்த மம்முட்டி

மணிரத்னத்தின் பேவரைட் இயக்குனருடன் கூட்டணி அமைத்த மம்முட்டி
பிரபல மலையாள நடிகர் மம்முட்டி ஹீரோவாக நடிக்கும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.
மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ், ஈ மா யூ, ஜல்லிக்கட்டு என சிறந்த படங்களை தந்து ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களையும் கவர்ந்தவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இந்திய அளவில் கொண்டாடப்படும் இயக்குனரான மணிரத்னத்தின் பேவரைட் இயக்குனரும் லிஜோ ஜோஸ் தான். அவர் இயக்கிய அனைத்து படங்களும் தனக்கு மிகவும் பிடிக்கும் என மணிரத்னம் ஒரு நிகழ்வில் கூறியிருந்தார்.


இந்நிலையில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என பெயரிட்டுள்ளனர். பழனியை மையப்படுத்தி இந்தப் படம் தயாராக உள்ளது. இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் சுந்தர்.சி உடன் கூட்டணி அமைக்கும் ராஷி கண்ணா
தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணா, மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
2. தேசிய விருது வென்ற இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அருண் விஜய்
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் அருண் விஜய், அக்னிச்சிறகுகள், பார்டர், வா டீல், பாக்ஸர், சினம், யானை, ஓ மை டாக் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
3. முதன்முறையாக செல்வராகவன் உடன் கூட்டணி அமைத்த யோகிபாபு
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, அவ்வப்போது ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.
4. கே.ஜி.எப் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ராம்சரண்
பிரபாஸின் சலார் படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.