அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தை பாராட்டிய கமல்


அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தை பாராட்டிய கமல்
x
தினத்தந்தி 17 Jan 2022 6:02 PM GMT (Updated: 17 Jan 2022 6:02 PM GMT)

தமிழ், தெலுங்கு போன்று பல மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றி பெற்ற புஷ்பா திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

சுகுமார் இயக்கியத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் நடித்து சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது. இப்படத்தில் சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா பாடல் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ‘புஷ்பா’ படத்தை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியதாக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நேரம் ஒதுக்கி எங்களின் ‘புஷ்பா’ திரைப்படத்தைப் பார்த்த அன்புள்ள உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு மிக்க நன்றி. நீங்கள் மிகவும் இனிமையானவர். எங்கள் அனைவரது பணி குறித்தும் நீங்கள் கூறிய அன்பான வார்த்தைகளுக்கு நன்றி” என்று தெரிவித்து அதனுடன் சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். 

Next Story