பாகுபலி எழுத்தாளரின் அடுத்த கதை - எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள்


பாகுபலி எழுத்தாளரின் அடுத்த கதை - எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள்
x
தினத்தந்தி 20 Jan 2022 4:57 PM GMT (Updated: 20 Jan 2022 4:57 PM GMT)

பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து அக்கதை எழுத்தாளரின் அடுத்த படைப்பை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாகுபலி, பஜ்ரங்கி பைஜான், மணிகர்னிகா மற்றும் வெளிவர காத்திருக்கும் ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களுக்கு திரைக்கதை எழுதியிருப்பவர் விஜயேந்திர பிரசாத். இவர் இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலியின் தந்தை. தெலுங்கு, தமிழ், இந்தி என 25க்கும் மேற்பட்ட பல மொழி படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதுவதற்காக விஜயேந்திர பிரசாத் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் இடம்பெறுவார்கள் என்றும் படக்குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார். ஸ்ரீவாரி பிலிம் இதற்குமுன் 'தர்மபிரபு' மற்றும் 'ஆனந்தம் விளையாடும் வீடு' ஆகிய இரண்டு படங்களைத் தயாரித்துள்ளது.

Next Story