தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்த கன்னட நடிகர் யுவராஜ் கைது


தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்த கன்னட நடிகர் யுவராஜ் கைது
x

’ஹனிடிராப்’முறையில் தொழிலதிபரை மிரட்டி ரூ.14 லட்சம் பறித்ததாக, நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெங்களூரு ஜே.பி.நகரை சேர்ந்தவர் யுவராஜ். இவர், மிஸ்டர் பீமாராவ் என்ற கன்னட படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தொழில் அதிபர் ஒருவரிடம் பணம் பறிக்க யுவராஜ் திட்டமிட்டார். இதற்காக அவருடன் செல்போனில் இளம் பெண்கள் பெயரில் ஆபாசமாக பேசி உரையாடி வந்தார். அவருடன் தொழில் அதிபரும் பேசி வந்துள்ளார். பின்னர் தொழில் அதிபர் வீட்டுக்கு சென்று தன்னை குற்றப்பிரிவு போலீஸ்காரர் என்று யுவராஜ் அறிமுகப்படுத்தி இளம் பெண்களுடன் ஆபாசமாக உரையாடிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கமால் இருக்க பணம் தர வேண்டும் என்றும் மிரட்டி ரூ.14 லட்சத்தை வாங்கி உள்ளார். ஆனாலும் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் தொழில் அதிபர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து நடிகர் யுவராஜையும் அவருக்கு உடந்தையாக இருந்த இளம் பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story