காளி


காளி
x
தினத்தந்தி 24 April 2018 7:06 PM GMT (Updated: 24 April 2018 7:06 PM GMT)

விஜய் ஆண்டனி அடுத்ததாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் `காளி' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

விஜய் ஆண்டனியின் அடுத்த படம் `காளி'.  இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜய் ஆண்டனி, தற்போது பல படங்களில் நடித்து முன்னணி நாயகர்களுள் ஒருவராக வலம் வருகிறார்.  விஜய் ஆண்டனி அடுத்ததாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் `காளி' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

ஆக்‌ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி , சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா நடித்துள்ளனர். யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், மதுசூதன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

`காளி' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப் மூலம் தானே தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

Next Story