நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி..!


நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி..!
x
தினத்தந்தி 7 Jan 2022 11:24 PM IST (Updated: 7 Jan 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

நடிகை திரிஷா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இன்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 8000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான திரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
 
தன்னுடைய டுவிட்டர் பதிவில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நடிகை திரிஷா, தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் 'அனைத்து முன்னெச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றிய போதிலும், புத்தாண்டுக்கு சற்று முன்பு எனக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 

எனக்கு அறிகுறிகள் இருந்தன. இந்த வாரம் எனக்கு வேதனை மிகுந்த வாரமாக இருந்தாலும், தடுப்பூசி எடுத்துக்கொண்டதன் விளைவாக எனக்கு பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. நான் இன்று குணமடைந்து நன்றாக இருப்பதாக உணர்கிறேன். அதற்காக தடுப்பூசிக்கு நன்றி கூறுகிறேன். 

தயவு செய்து அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் நலம்பெற வேண்டும் என பிரார்த்தனை செய்யும் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி' என்று கூறியுள்ளார். 


Next Story