அமெரிக்க அரசின் உயர் பதவியில் முதல் இந்தியப் பெண்


அமெரிக்க அரசின் உயர் பதவியில் முதல் இந்தியப் பெண்
x
தினத்தந்தி 22 Nov 2021 5:30 AM GMT (Updated: 20 Nov 2021 11:17 AM GMT)

இது அமெரிக்க நீதித் துறையில் மூன்றாவது உயரிய பதவி ஆகும். அமெரிக்காவில் இத்தகைய உயர் பதவிகளில் பணியாற்றும் முதல் பெண் மற்றும் அமெரிக்கர் அல்லாதவர் வனிதா குப்தா.

மெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரையின் மூலம், அந்த நாட்டின் இணை அட்டர்னி ஜெனரலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வனிதா குப்தா. இவர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் ராஜீவ் குப்தா-கமலா வர்ஷினி தம்பதி இந்தியாவில் இருந்து அமெரிக்காவின் பெனிசில்வேனியாவில் குடியேறியவர்கள். 46 வயதாகும் வனிதாவின் கணவர் வியட்நாமை சேர்ந்த சின் லே. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த வனிதா, அங்குள்ள யேல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சட்டமும் பயின்றார். போதைப் பொருள் தொடர்பாக ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தவறாக தண்டிக்கப்பட்ட வழக்கில், அவர்களுக்காக வாதாடி நியாயத்தையும், இழப்பீடு தொகையையும் பெற்றுக் கொடுத்தார். இந்த வழக்கில் பெற்ற வெற்றியின் மூலம் தன்னை உலகறியச் செய்தார்.

பின்னர் சிவில் லிபர்டிஸ் எனும் மனித உரிமை அமைப்பில் வழக்கறிஞராக பணியாற்றி 200-க்கும் மேற்பட்ட வழக்குகளில் வென்றுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆட்சி காலத்தில் துணை உதவி அட்டர்னி ஜெனரல் மற்றும் சிவில் உரிமைகள் பிரிவில் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். ஜோ பைடன் ஆட்சி அமைந்த பிறகு அமெரிக்க இணை அட்டர்னி ஜெனரல் பதவிக்கு கடந்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமெரிக்காவில் அதிபரின் பரிந்துரையை செனட் சபை அங்கீகரிக்க வேண்டும். இல்லையெனில் அது தோல்வியில் முடியும். செனட் சபையில் இவருக்கு ஆதரவாக 51 ஓட்டுக்களும், எதிராக 49 ஓட்டுக்களும் பதிவாகியது. இதன் மூலம் இவர் இணை அட்டர்னி ஜெனரலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  இது அமெரிக்க நீதித் துறையில் மூன்றாவது உயரிய பதவி ஆகும். அமெரிக்காவில் இத்தகைய உயர் பதவிகளில் பணியாற்றும் முதல் பெண் மற்றும் அமெரிக்கர் அல்லாதவர் வனிதா குப்தா.

இதுவரை தனது அயராத உழைப்பாலும், கடின முயற்சிகளாலும் முன்னேறி உயர் பதவிகளை அடைந்துள்ள வனிதா இன்றைய பெண்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

Next Story