பழைய வளையல்களில் கண்கவர் கைவினைப் பொருட்கள்


பழைய வளையல்களில் கண்கவர் கைவினைப் பொருட்கள்
x
தினத்தந்தி 10 Jan 2022 11:00 AM IST (Updated: 9 Jan 2022 12:19 PM IST)
t-max-icont-min-icon

வீட்டு நிலைப்படி, கதவு மற்றும் ஜன்னலில் தொங்க விடுவதற்கான ‘வால்ஹேங்கிங்’ போன்றவற்றை, வளையல்களைக் கொண்டு செய்யலாம். பூஜை அறைகளின் நுழைவில் கூட தோரணம் போன்று அமைக்கலாம்.

பெண்களுக்குப் பெரும்பாலும் வளையல்கள் மீது தனிப் பிரியம் இருக்கும். அதனாலேயே ஒவ்வொரு ஆடைக்கும் ஏற்றவாறு வளையல்களை வாங்க விரும்புவார்கள்.

இவ்வாறு, பயன்படுத்தி பழையதாகிப்போன வளையல்களை தூக்கி எறியாமல், அவற்றைக் கொண்டு வீட்டை அழகுபடுத்தும் கைவினைப் பொருட்களை  எளிமையாகச் செய்து கொள்ளலாம்.

கண்ணாடி வளையல், பிளாஸ்டிக் வளையல் என நாம் பயன்படுத்தும் பல்வேறு வகைகளை அப்படியே சேகரித்து வைத்து, நம்முடைய கற்பனைத் திறனைப் பயன்படுத்தி அவற்றை வீட்டை அலங்கரிக்கும் அலங்காரப் பொருட்களாக மாற்றலாம். பழைய மணி, பிளாஸ்டிக் பொருட்கள், உல்லன் நூல், சில்க் நூல் போன்ற பழைய பொருட்களைக் கொண்டே வளையல்களைப் பயன்படுத்தி பல்வேறு விதமான அலங்காரப் பொருட்களைச் செய்யலாம்.

இன்றைக்குப் பலருடைய கவனம் நூல் வளையல்களின் மீது திரும்பியுள்ளது. புதிய வளையல்களைப் பயன்படுத்தாமல், நாம் பயன்படுத்திய ஒரே அளவிலான பழைய வளையல்களையே பயன்படுத்தி இவற்றைத் தயாரித்துக் கொள்ளலாம். 

பாட்டில்களைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்யும் பொழுது, உடைந்த கண்ணாடி வளையல்களை ஒட்டி அழகுபடுத்தலாம்.

வீட்டு நிலைப்படி, கதவு மற்றும் ஜன்னலில் தொங்க விடுவதற்கான ‘வால்ஹேங்கிங்’ போன்றவற்றை, வளையல்களைக் கொண்டு செய்யலாம். பூஜை அறைகளின் நுழைவில் கூட தோரணம் போன்று அமைக்கலாம்.

முழு வளையலைப் பயன்படுத்தி போட்டோ பிரேம் செய்யலாம்.

படம் வரையும் பொழுது உடைந்த கண்ணாடி வளையல்களைக் கொண்டு, நமக்கு பிடித்தமான உருவங்களை அமைத்து, நமது கற்பனைத் திறனைக் காண்பிக்கலாம்.

வளையலை ஒன்றன்மீது ஒன்று அடுக்கி, அவற்றின் நடுவில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துப் பண்டிகை கால அலங்கார விளக்குகள் செய்யலாம். கண்ணாடி வளையல்களின் ஒளி பிரதிபலிப்பு அறையை அழகாக்கும்.

பழைய வளையல்களையும் உல்லன் நூலையும் பயன்படுத்தி, கூடை போன்று செய்யலாம். இவற்றை வீட்டின் வரவேற்பறை அலமாரிகளில் வைக்கும் பொழுது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

மேலும், வீட்டில் சிறிய சிறிய பொருட்களை (ஊக்கு, ஹேர்பின்) வைப்பதற்கான ஸ்டாண்ட் செய்யலாம்.

சின்னச் சின்ன காதணிகள் வைப்பதற்கான நகை பெட்டிகளையும், வளையல்களைக் கொண்டு செய்யலாம். 

Next Story