தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
x
தினத்தந்தி 8 Nov 2021 5:30 AM GMT (Updated: 6 Nov 2021 8:35 AM GMT)

இந்தியாவில் பெண்களை பாதிக்கும் நோய்களின் பட்டியலில் மார்பக புற்றுநோய் முதன்மையாக இருக்கிறது. இதை பரிசோதனை செய்து கண்டறியும் முறை மிகவும் எளிதானது. தொடக்க நிலையில் கண்டறியும்போது மருந்துகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களின் மூலம் புற்றுநோயில் இருந்து மீண்டு வர முடியும்.

டலில் செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபணுக்களில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது. தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றி, அதேநேரம் பழைய செல்கள் இறக்காமல் இருந்தாலும், அவை ஒன்று சேர்ந்து புற்றுநோய்க் கட்டியாக மாறக்கூடும். இது உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் தன்மை கொண்டது.

புற்றுநோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து, குணப்படுத்துவதை வலியுறுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 7-ந் தேதி, நாடு முழுவதும் ‘தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்' அனுசரிக்கப்படுகிறது. இது முன்னாள் மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹம்சவர்தனால் அறிவிக்கப்பட்டு 2014-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ‘உலக புற்றுநோய் தினம்' பிப்ரவரி 4-ல் அனுசரிக்கப்படுகிறது. 

இந்தியாவில் பெண்களை பாதிக்கும் நோய்களின் பட்டியலில் மார்பக புற்றுநோய் முதன்மையாக இருக்கிறது. இதை பரிசோதனை செய்து கண்டறியும் முறை மிகவும் எளிதானது. தொடக்க நிலையில் கண்டறியும்போது மருந்துகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களின் மூலம் புற்றுநோயில் இருந்து மீண்டு வர முடியும்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய உந்துதல் அவர்களைச் சுற்றி இருப்பவர்களே. அனைவரும் ஒன்றாக இணைந்து விழிப்புணர்வோடு ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து புற்றுநோயை புறம் தள்ளலாம். 

Next Story