தேசிய போலிக் அமிலம் விழிப்புணர்வு வாரம்


தேசிய போலிக் அமிலம் விழிப்புணர்வு வாரம்
x
தினத்தந்தி 3 Jan 2022 5:30 AM GMT (Updated: 1 Jan 2022 11:01 AM GMT)

தாயின் கருவில் வளரும் குழந்தையின் மூளை, தண்டுவடம், நரம்பு மண்டலம் போன்ற முக்கிய உறுப்புகள் உருவாகி ஆரோக்கியமாக வளரு வதற்கும் போலிக் அமிலம் அவசியமானது.

டல் ஆரோக்கியமாக இயங்குவதற்குத் தேவைப்படும், சத்துக்களில் முக்கியமானவை ‘வைட்டமின் பி’ மூலக்கூறுகள். போலட் மற்றும் போலிக் அமிலம் ஆகியவை வைட்டமின் பி9 வகையைச் சார்ந்தவை. இதில் ‘போலிக் அமிலம்’ பெண்களின் ஆரோக்கியத்துக்கு அவசியமான சத்துக்களில் ஒன்று. 

நீரில் எளிதில் கரையக்கூடிய இது, சாப்பிட்ட எட்டு மணி நேரத்தில் உடலில் இருந்து சிறுநீர் மூலம் வெளியேறிவிடும். ஆகையால் தினசரி கிடைக்க வேண்டிய முக்கியமான ஊட்டச்சத்துக்களில் போலிக் அமிலத்துக்கு தனி இடம் உண்டு.

தாயின் கருவில் வளரும் குழந்தையின் மூளை, தண்டுவடம், நரம்பு மண்டலம் போன்ற முக்கிய உறுப்புகள் உருவாகி ஆரோக்கியமாக வளரு வதற்கும் போலிக் அமிலம் அவசியமானது. 

எனவே இளம் பருவத்தில் இருந்தே பெண்களுக்கு உணவில் போலிக் அமிலம் கிடைக்குமாறு செய்ய வேண்டும். புதிதாக திருமணமான பெண்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தேவையான அளவு போலிக் அமிலம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே, ‘தேசிய போலிக் அமிலம் விழிப்புணர்வு வாரம்’ ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 3 முதல் 10-ந் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. மேலும், மாதத்தின் ஒரு பகுதியாக ‘தேசிய பிறப்பு குறைபாடுகள் தடுப்பு’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

உடலின் புரத உற்பத்திக்கு பெரிதும் உதவும் போலிக் அமிலத்தின் முக்கியத்துவம் அறிந்து, வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை ஆரம்பத்தில் இருந்தே மேம்படுத்துவோம். 

Next Story