வீட்டை சுத்தப்படுத்தும் ‘ஸ்மார்ட் கிளீன்’ கருவிகள்


வீட்டை சுத்தப்படுத்தும் ‘ஸ்மார்ட் கிளீன்’ கருவிகள்
x
தினத்தந்தி 3 Jan 2022 5:30 AM GMT (Updated: 1 Jan 2022 11:53 AM GMT)

வீட்டை தூய்மைப்படுத்துவதற்கு உதவும் ஸ்மார்ட் கிளீனர்கள் பற்றிய தொகுப்பு இது.

தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகள், நமது அன்றாட வாழ்வில் பல வேலைகளை சுலபமாக்கி வருகின்றன. அந்த வரிசையில் வீட்டை தூய்மைப்படுத்துவதற்கு உதவும் ‘ஸ்மார்ட் கிளீன்’ கருவிகள் பற்றி இங்கே பார்ப்போம். 

1. வை-பை ரோபோ வாக்குவம் கிளீனர்
இந்த வாக்குவம் கிளீனர், தானாகவே வீட்டின் மூலை முடுக்குகளை சுத்தம் செய்யும். இது ‘வை-பை’ இணைப்பு மூலம் செயல்படக்கூடியது. கூகிள் அசிஸ்டன்ட் மற்றும் அலெக்ஸா போன்ற செயற்கை நுண்ணறிவு குரல் கட்டுப்பாட்டு செயலிகள் உதவியுடன் இதை இயக்க முடியும். ஸ்மார்ட்போன் செயலிகள் மூலமாகவும் இதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தலாம். இடைவிடாமல் 1 மணி நேரம் செயல்படும்.

2.  ரோபோ மாப்
இந்த நவீன ரோபோ மாப், நமது கட்டளைகளுக்கு ஏற்றவாறு, தரையைத் தண்ணீர் கொண்டு, சுத்தமாகத் துடைக்கும் திறன் பெற்றது.

3. சூப்பர் பாஸ்ட் ஸ்கிரப்பர் 
சமையல் அறையில் பெரும்பாலான நேரத்தைக் கழிக்கும் இல்லத்தரசிகளுக்கு இது பெரிதும் பயன்படும். அடுப்பை சுத்தம் செய்வதுதான், சமையல் அறை வேலைகளில் மிகவும் கடினமானது. இந்த ‘சூப்பர் பாஸ்ட் ஸ்கிரப்பர்’ அந்த வேலையை எளிமையாக்குகிறது. 5 வெவ்வேறு ‘ப்ரஷ்’ உடன் கூடிய மோட்டார் மூலம், இது அடுப்பை சில நொடிகளில் சுத்தம் செய்யும்.

4. மைக்ரோவேவ் கிளீனர் 
மைக்ரோவேவ் சாதனத்தை சுத்தம் செய்வதற்கு, இந்த கிளீனரில் சிறிது தண்ணீர், எலுமிச்சம் பழச்சாறு மற்றும் வினிகர் சேர்த்து ஓவனுக்குள் வைத்தால் போதும். நொடிப்பொழுதில் உங்கள் மைக்ரோவேவ் சாதனம் சுத்தமாகிவிடும்.

5.  விண்டோ கிளீனர் 
கண்ணாடி ஜன்னல்களை சுத்தம் செய்வதற்கு இந்த ரோபோ உதவும். ரிமோட் மூலம் இதை இயக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும். இதில் மைக்ரோ பைபர் துணி பொருத்தப்பட்டு இருப்பதால், கண்ணாடி ஜன்னல்களை எளிதாக சுத்தப்படுத்த 
முடியும்.

இல்லத்தரசிகள், மேற்கண்ட ஸ்மார்ட் கிளீன் கருவிகள் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தி ஆக்கப்பூர்வமான வழிகளில் செலவிடலாம். 

Next Story