பெண்களுக்கு அவசியமான ‘சுயசார்பு’
இல்லத்தரசிகள் முதல் விண்ணை நோக்கி பயணிக்கும் பெண்கள் வரை அனைவருக்கும் சுயசார்பு அவசியம்.
வளர்ந்து வரும் இந்தியாவில் பெண்கள் அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றனர். எனினும் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பெண்கள், சுயசார்பு நிலையை அடையாமலே இருக்கிறார்கள். இன்றைய இளம்பெண்களில் பலர், குடும்பத்தினர் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கும், தங்களது சுயசார்பு மற்றும் சுதந்திரத்துக்கும் இடையில் குழம்பிய நிலையிலேயே உள்ளனர்.
தாங்கள் நினைத்ததை, பிறரை சார்ந்து இல்லாமல் சரியான தருணத்தில் தாமாகவே செய்து கொள்ளும் தன்னிச்சையே சுயசார்பு. தினசரி தேவைகளை பூர்த்தி செய்வதற்குக்கூட பிறரின் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பது தவறு. இது நம் முன்னேற்றத்தை முடக்கும். இல்லத்தரசிகள் முதல் விண்ணை நோக்கி பயணிக்கும் பெண்கள் வரை அனைவருக்கும் சுயசார்பு அவசியம்.
இது மனதுக்கு புத்துணர்வு அளித்து, முழுமையான தன்னம்பிக்கையுடன் செயல் களில் ஈடுபட உந்துதலாக அமையும். இப்பாதையில் பயணிக்கும் பெண்களுக்கு தானாகவே தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும். இந்த தன்னம்பிக்கை அவர்களின் சிறுசிறு மகிழ்ச்சிக்கும் சிறகுகளை அளித்து உயர பறக்க வழி வகுக்கும்.
Related Tags :
Next Story