உலக சிந்தனை தினம்
உலகம் முழுவதும் சிந்தனைத் திறனை அதிகரிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம்.
சிந்தனையே புதிய தொடக்கத்துக்கான திறவுகோல். சிந்தனை இல்லை என்றால் அறிவியலும், விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் வளர்ச்சி அடைந்திருக்காது. இது தவிர, நம்முடைய அடுத்த செயலுக்கும், அடிப்படையாக இருப்பது சிந்தனைதான்.
1926-ம் ஆண்டு முதல் பெண்கள் சாரணர் இயக்கத்தை தொடங்கிய லார்ட் பேடன் பவுல் மற்றும் லேடி பேடன் பவுல் ஆகிய இருவரின் பிறந்த தினமான பிப்ரவரி மாதம் 22-ந் தேதி ‘உலக சிந்தனை தின மாக’ அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் சிந்தனைத் திறனை அதிகரிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம்.
சிந்தனை என்பது முன்னேற்றப் பாதைக்கான வழியாக இருந்து, அவ்வழியில் ஏற்படும் பிரச்சினைகளை நீக்கவும் உதவும். நற்சிந்தனை நல்ல மனிதனை உருவாக்குகிறது. ஆகையால், நாம் பயன்படுத்தும் வார்த்தைகள், செயல்கள், பழக்கவழக்கங்கள், பண்பு அனைத்தையும் கவனமாக மேற்கொண்டால் வாழ்க்கை மேன்மை அடையும்.
Related Tags :
Next Story