உலக சிறுநீரக தினம்


உலக சிறுநீரக தினம்
x
தினத்தந்தி 7 March 2022 5:30 AM GMT (Updated: 5 March 2022 9:51 AM GMT)

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்வது, நீர் வறட்சி ஆகியவற்றின் காரணமாக நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படுகிறது.

டலில் உள்ள கழிவுகளை வெளி யேற்றுவதில் முக்கியப் பங்கு வகிப்பது சிறுநீரகங்கள். நச்சுப் பொருட்களை வெளியேற்றுவது தொடங்கி, ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது வரை, உடல் ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வகிக்கிறது.

சர்வதேச நெப்ராலஜி சங்கம் மற்றும் சிறு நீரக அடித்தளங்கள் சர்வதேச கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் 2006-ம் ஆண்டு முதல் ‘உலக சிறுநீரக தினம்’ மார்ச் மாதம் 11-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்வது, நீர் வறட்சி ஆகியவற்றின் காரணமாக நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படுகிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம்.

இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் சிறுநீரக செயலிழப்பால் சிரமப்படுகிறார்கள். ஆண்களை விட, பெண்களே சிறுநீரக நோய்களால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு சிறுநீரக தொற்று பிரச்சினை எளிதில் ஏற்படுகிறது. 

இதை உணவு மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் மூலம் தடுக்கலாம். ‘சிறுநீரகத்தின் சீரான செயல்பாடு, உடல் ஆரோக்கியத்தின்

Next Story