இப்படிக்கு தேவதை
இப்படிக்கு தேவதை
1. எனக்கு 6 வயதில் மகனும், 2 வயதில் மகளும் உள்ளனர். குழந்தைகள் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறேன். ஆனால், அவர்கள் அறியாமல் செய்யும் சிறு தவறுகளைக்கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் மிகவும் கோபப்படுகிறேன். என்னை அறியாமல் கடினமான வார்த்தைகளை பயன்படுத்துகிறேன். என் மனதை மாற்றிக் கொள்வதற்கு ஆலோசனை கூறுங்கள்.
நீங்கள் உங்கள் பிள்ளைகள் மீது அதிக பாசம் வைத்திருப்பதால், அவர்களிடம் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பீர்கள். சிறு குழந்தைகள் தவறுகள் செய்வது சகஜமானதுதான். சிறு சிறு தவறுகளை செய்வது அவர்கள் இயல்பாக வளர்ந்து வருகிறார்கள் என்பதைக் குறிக்கும். தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வதன் மூலம், அவர்கள் குணநலன்களுடன் கூடிய பெரியவர்களாக வளர முடியும்.
2. எனக்கு 53 வயது. என் கணவர் இறந்து 15 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது ஒரே மகனுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து வைத்தேன். எனது மருமகள் திருமணமான புதிதில் மிக நல்ல முறையில் என்னிடம் நடந்து கொண்டாள். ஆனால் கடந்த ஆறு மாத காலமாக, அவள் நடந்துகொள்ளும் முறையில் மாற்றம் தெரிகிறது.
எனது மகனிடம் என்னை நல்ல முறையில் கவனித்துக் கொள்வது போலவும், அவன் இல்லாதபோது வார்த்தைகளாலும், செய்கைகளாலும் என் மனதை காயப்படுத்தும்படியாகவும் நடந்துகொள்கிறாள். என் மகன் இதுவரை என்னிடம் நல்ல முறையில்தான் நடந்து வருகிறான். எனது மருமகளின் மனதை மாற்றுவதற்கான ஆலோசனை வழங்குங்கள்.
எந்த உறவிலும் ஒரு நபரால் மட்டுமே விரிசல் ஏற்படாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மகன் உங்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்கிறார் என்று நீங்கள் கூறியதில் இருந்தே, உங்கள் மருமகள் அவரை உங்களுக்கு எதிராக மாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை என்பது தெளிவாகிறது.
உங்கள் மருமகள் வேறு ஒரு சூழ்நிலையில் வளர்ந்தவர். புகுந்த வீட்டின் புதிய சூழல், உறவுகள், நடத்தை முறைகள் ஆகியவற்றுடன் பழகி வருகிறார். இந்த மாற்றத்தில் அவருக்கு வேண்டிய ஆதரவை வழங்குங்கள். வெளிப்படையாகப் பேசி பழகுங்கள். உங்கள் உறவின் அடிப்படையில் அவருக்கு கடினமாக இருப்பவற்றை எளிதாக்குவதற்கு உதவுங்கள். தனிப்பட்ட வேறுபாடுகளை ஒப்புக்கொள்வது நெருங்கிய உறவுகளில் இணக்கமாக மாறுவதற்கு மிகவும் முக்கியமானது.
உங்கள் மருகளின் செயல்பாடுகள் நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதபடி இருக்கும்போது, அவரை உட்காரவைத்து பொறுமையாக பேசுங்கள். நல்ல நண்பரை போல அவரது சிரமங்களை போக்குவதற்கு ஆதரவு வழங்குங்கள். மாறாக ஆதிக்கம் செலுத்தவும், கட்டுப்படுத்தவும் முயற்சிப்பது உறவில் விரிசலை அதிகப்படுத்தும்.
அவளுக்கு உங்கள் அன்பை அதிகமாக கொடுங்கள். அவளிடம் நல்ல மாற்றங்களை காணும்போது பாராட்டுங்கள். அவளும் உங்களை கொண்டாடத் தொடங்குவாள்.
Related Tags :
Next Story