சர்வதேச பார்க்கின்சன் தினம்
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 11-ந் தேதி ‘சர்வதேச பார்க்கின்சன் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
மூளையில் சுரக்கும் மகிழ்ச்சிக்கான ரசாயனம் ‘டோபமைன்’. வயதாகும்போது மூளை நரம்பணுக்களின் எண்ணிக்கை குறைவதால், டோபமைன் சுரப்பும் குறையும். இதன் விளைவாக ‘பார்க்கின்சன்’ எனும் மறதி நோய் ஏற்படும். பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்களின் பட்டியலில் பார்க்கின்சன் நோயும் ஒன்று.
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 11-ந் தேதி ‘சர்வதேச பார்க்கின்சன் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. பார்க்கின்சன் நோய் பற்றி நம் அன்புக்குரியவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகத்துடன் வெளிப்படையாக பேசுவதை ஊக்குவிப்பதே இந்நாளின் நோக்கம்.
பார்க்கின்சன் நோயை முழுவதுமாக குணப் படுத்த முடியாது. எனினும் அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், நோயின் தன்மையைக் கட்டுப்படுத்தலாம். நடைப்பயிற்சி, உடல் தசைகளின் இறுக்கத்தை குறைக்க உதவும் இயன்முறை சிகிச்சைகளை மேற்கொள்வது, எப்போதும் மனதையும், உடலையும் இயக்கத்தில் வைத்துக்கொள்வது, யோகா போன்ற வாழ்வியல் நடைமுறைகளைப் பின்பற்றுவது ேபான்ற செயல்களின் மூலம் இந்நோயின் தீவிர பாதிப்புகளை குறைக்க முடியும்.
Related Tags :
Next Story